காலநிலை அறிக்கை - ஒக்ரோபர் 9 முதல் 15 வரையானது
புயல் காற்று பலவீனமடைந்து காணப்பட்டதால் வாரத்தின் முற்பகுதியில் எந்தவொரு மழைவீழ்ச்சியும் பதிவாகவில்லை. மதியவேளை இடி மற்றும் பலமான காற்றுடன் உள்நாட்டு பருவக்காற்று மழை 12ம் திகதி ஆரம்பமாகியது. மத்திய மலைநாட்டின் கிழக்கு மலைச்சாய்வுகளுக்கு நல்ல மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றது.
நாளாந்த மழைவீழ்ச்சியில் அதிகபட்சமாக கடந்தவாரத்தில் ஒக்ரோபர் 14ம் திகதியன்று எல்ஸ்டன் பிரதேசத்தில் 99.2 mm மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதேபோன்று அதிகபட்ச வெப்பநிலையாக 38.4 பாகை செல்சியஸ் ஒக்ரோபர் 09ம் திகதி திருகோணமலையிலும் ஆகக்குறைந்த வெப்பநிலையாக 9.1 பாகை செல்சியஸ் ஒக்ரோபர் 10ம் திகதி நுவரெலியாவிலும் பதிவாகியுள்ளன.
2009-11-03 22:06:03

