2009 ஒக்ரோபர் 15 இல் பேராதனையில் மீண்டும் மண்சரிவு ஆரம்பம்
அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் கீழ் செயற்படும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம் (NBRO) -இன் மண்சரிவு கற்கைகள் மற்றும் சேவைகள் பிரிவினால் (LSSD), பேராதனை நகரில் மேலுள்ள மலைச்சாய்வில் நிலவும் மண்சரிவு அபாயம் பற்றி மண்சரிவு நடவடிக்கைகளை கட்டுப்படுத்துவதற்காக 2000ம் ஆண்டில் இனம்காணப்பட்டது. நேர்மாறான நிலைத்திருப்பு நிலைமைகள் மற்றும் முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பில் உரிய அலுவல்களுக்கு அறியத்தரப்பட்டது.
இதேவேளை பேராதனையின் வர்த்தக நிலையத்திற்குப் பாரிய சேதத்தை ஏற்படுத்தும் வண்ணம் 2007 ஜனவரியில் மலைச்சாய்வு மண்சரிவுக்குள்ளானது. இருப்பினும் மண்சரிவு அபாயம் மீண்டும் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளதாக NBRO கருதியதையடுத்து, அருகில் உள்ள மண்சரிவின் எதிர்கொள்ளக்கூடிய தீய விளைவுகளை தவிர்க்கும் முகமாக அரசாங்கம் பரிகார நடவடிக்கைகள் பலவற்றை மேற்கொண்டது. மண்சரிவு தொடர்பில் கட்டுப்பாடு மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் 2008 இல் NBRO வினால் ஆரம்பிக்கப்பட்டது. நிதிசார் சிக்கல்கள் காரணமாக செயற்பாடுகளில் தாமதம் நிலவியது.
மீண்டும் 2009 ஓக்ரோபர் 14ம் திகதியளவில் இந்த மலைச்சாய்வில் நிலவிய சீரற்ற நிலைமையை அவதானித்து உடனடியாக அதனுடன் தொடர்புபட்ட முகவர்களுக்கும் அமைப்புகளுக்கு அதுபற்றிய தகவல்களை வழங்குவதற்கு NBRO நடவடிக்கை மேற்கொண்டது. NBRO வினால் எதிர்பார்க்கப்பட்டவாறே இம் மலைச்சாய்வில் அடுத்தநாள் மண்சரிவு ஒன்று இடம்பெற்றது. இதன் காரணமாக மீள்புனரமைப்பு பணிகள் இடம்பெற்று பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் வரையில், கண்ணொறுவ சந்தியிலிருந்து மகாவலி பாலம் வரையில் கண்டி-கொழும்பு பாதை ஒரு சில நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது.

