SINHALATAMILENGLISH


அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகம் (NCDM)



நிர்வாகத்தின் தலைவராக மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்களும்,
பிரதித் தலைவராக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் விளங்குவர்.

நிர்வாகத்தின் உறுப்புரிமை அமைச்சுக்கள் பின்வருவம் பகுதிகளுக்கு பொறுப்புடையன:



1. சமூக நலன்
2. மீள்குடியேற்றமும் மீள்நிர்மாணமும்
3. சுற்றாடல்
4. உள்நாட்டு அலுவல்கள்
5. சுகாதாரம்
6. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்
7. வீடமைப்பு
8. கரையோர வலய பாதுகாப்பு
9. நீா்ப்பாசனம்
10. மின்சாரம்
11. பாதுகாப்பு
12. பொலிஸ்
13. நிதி
14. நிலம்
15. நீா்வள மற்றும் மீன்பிடித்துறை
16. வெளிநாட்டு அலுவல்கள்
17. நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு
18. பெருந்தெருக்கள்
19. நகர திட்டமிடல்
20. கல்வி
21. அனா்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சு
22. நிவாரணம் மீள்குடியேற்றம் மற்றும் வேற்றுமை களைதல்
23. தேசிய கட்டுமான அமைச்சு


பிரதான அமைச்சா்களுடன் ஒவ்வொரு மாகாண சபையிலிருந்தும் ஒவ்வொரு பிரதிநிதிகள் மற்றும் மாகாணசபை ஆளுநர் ஆகியோர் தொடா்புடைய ஒன்றுகூடல்களின்போது பிரசன்னமாவா். இங்கு தெரிவுசெய்யப்பட்ட பிரதிநிதிகள் எவரும் இல்லை.

மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அவா்களின் தலைமையின் கீழ் 2007 யூலை 30 இல் இரண்டாவது கழக ஒன்றுகூடல் இடம்பெற்றது.

அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகத்தின் இரண்டாவது கழக ஒன்றுகூடலின்போது மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் பின்வருமாறு:

1.அனா்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் செயலாளா் பி டயஸ் அமரசிங்க அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகத்தின் செயலாளராக 2007 யூலை 30 முதல் நியமிக்கப்பட்டார்.

2. அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகத்தின் செயலகம், அனா்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சினால் இயக்கப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

3. கழகத்தில் அங்கம் வகிக்கவென அனா்த்த முகாமைத்துவம், நிவாரணம், மீள்குடியேற்றம், வேற்றுமை களைதல் அதேபோல தேசிய கட்டுமானம் என்பவற்றுக்கு பொறுப்பான அமைச்சா்கள் நியமிக்கப்பட்டனா்.

4. அனா்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய கழகத்தின் ஓா் அங்கமாக தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவொன்று நியமிக்கப்பட்டது. சுனாமி எச்சரிக்கை விடுத்தல், கொழும்பு மாவட்டத்தை பாதிக்கக்கூடிய இயற்கை அனா்த்தங்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு அபாயங்களுக்கு முகம்கொடுத்தல் மற்றும் நடவடிக்கை மேற்கொள்ளல், இயற்கை அனா்த்தங்களுக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களை அடையாளம் காணுதல் அதேபோன்று சரியான வழிகாட்டல்களை மேற்கொள்ளல் போன்ற நடவடிக்கைகளை இக்குழு மேற்கொண்டு வருகின்றது.

5. நிலஅதிர்வுக்கு உள்ளாகக்கூடிய பிரதேசங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள கட்டிடங்களை உறுதிப்படுத்துவதற்கு தீா்மானம் மேற்கொள்ளப்பட்டது. நிர்மாண வேலைகளை ஆரம்பிப்பதற்கு முன்னராகவே தேசிய கட்டிட ஆராய்ச்சி ஸ்தாபனத்திடமிருந்து (NBRO) அனுமதி பெறுதல் வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

6. அனைத்து மாவட்ட செயலகங்களும் இயற்கை அனா்த்தங்கள் தொடா்பான அவசரகால நிலைமைகளின்போது ரூ. 500, 000 நிதி ஒதுக்கீட்டினைப் பெறுவார்கள்.

தேடல்
இவ்வார நிழற்படம்
Download Font

மேலும் செய்திகளுக்கு

 

காலநிலை அறிக்கை - ஒக்ரோபர் 9 முதல் 15 வரையானது

 

அபாயங்கள்


மண்சரிவுகளும் சுனாமி பற்றிய தகவல்களும்

 

நிகழ்வுகள்

தகவல்
செய்திகள்
நிகழ்வுகள்
அரசாங்க இணைப்புகள்